அரசியல்உள்நாடு

அபிவிருத்திக்காக 853 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

சபரகமுவ மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்த ஆண்டு (2025) அரசாங்கத்தால் 853 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை(14) சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள பிரதான அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சப்ரகமுவ உள்ளூராட்சி சபைகள் தொடர்பான இரத்தினபுரி மாவட்ட விசேட மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி உள்ளுராட்சி சபைகளின் மீளாய்வுக் கூட்டத்தை சப்ரகமுவ மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் சுஜீவா போதிமான்ன ஏற்பாடு செய்திருந்தார்.

சபரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரு மாவட்டங்களிலும், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாநகர சபைகள், பலங்கொடை மற்றும் எம்பிலிபிட்டிய நகர சபைகள், 25 பிரதேச சபைகள் என மொத்தம் 29 உள்ளூராட்சி மன்றங்கள் இயங்கி வருகின்றன.

மேற்படி சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்னவின் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் இரத்தினபுரி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன,

அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதியை முறையாகவும், முறைகேடுகள் இன்றிப் பயன்படுத்தவும் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
அத்துடன் சம்பந்தப்பட்ட திட்டங்களை விரைவாக அமுல்படுத்த வேண்டும்.

அபிவிருத்தித்காக அரசாங்கத்தினால் உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்ட நிதியை உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகளுக்காக உடனடியாகப் பயன்படுத்துமாறும் மற்றும் 2025ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன் அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

இதற்கமைய, உள்ளூராட்சி வீதி அபிவிருத்தி, சமூக நீர் வழங்கல், திண்மக் கழிவு முகாமைத்துவம், உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி உள்ளிட்ட உள்ளூராட்சித்துறை சார்ந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களை மையமாக வைத்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு

editor

தபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர்

தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்!