சூடான செய்திகள் 1

அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – பிரதேச செயலகங்களில் சேவையாற்றுகின்ற அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் இன்று(04) அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக குறித்த சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகங்களில் சேவையாற்றுகின்ற சுமார் 16000 அபிவிருத்தி அதிகாரிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக சங்கத்தின் இணைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் விஜயம்

முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு…

வரவு செலவு திட்டம் நாளை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு