உள்நாடு

அனைவருக்கும் 4% குறைந்த வட்டி வீதத்தில் கடன்

(UTV | கொழும்பு) – பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு நிவாரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின் போது அனைவருக்கும் 4 வீத குறைந்த வட்டி வீதத்தில் கடன்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தலைமையில் அண்மையில் ஹோக்கந்துரையில் பிரச்சாரக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தற்போதைய அரசாங்கத்தின் தலைமை நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அக்கறையின்றி செயற்படுகிறது.

இந்தநிலையில் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் அபிவிருத்தி செயலணியை நாம் உருவாக்கி வருகின்றோம் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருந்தார்.

Related posts

தீர்வு கிடைக்கும் வரை நாட்டை மூட முடியாது

சாணக்கியனை தாக்க முயன்றோர்களை தேடும் பொலிஸ்!

இம்முறை சிங்கள மொழி மூலம் மட்டுமே தேசிய கீதம் [VIDEO]