உள்நாடு

அனைத்து விசாக்களினதும் செல்லுபடி காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – தற்போது நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விசாக்களினதும் செல்லுபடி காலம் மேலும் ஒரு மாதக்காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் இன்று(09) முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை இது அமுலில் இருக்கும் என குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசா காலம் நிறைவடைந்தவர்களுக்கு அந்த காலப்பகுதிக்கான விசா கட்டணம் அறவிடப்படுமே தவிர எந்தவித அபராதமும் விதிக்கப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இதுவரை 895 கடற்படையினர் குணமடைந்தனர்

கடந்த 24 மணித்தியாலங்களில் 435 பேர் சிக்கினர்

அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகள் இன்று முதல் ஆரம்பம்