வகைப்படுத்தப்படாத

அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளையும் கொழும்புக்கு அழைப்பு

(UTV|COLOMBO)-தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று நாட்டின் அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளையும் சந்திக்கின்றனர்.

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கான தயார் நிலை மற்றும் ஒழுங்குகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இதற்காக அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடல் நடத்தி இருந்தது.
இதில் காவற்துறையினரும் கலந்துக் கொண்டனர்.
இதன்போது, இந்த முறை உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேர்தல் பிரசாரங்களுக்காக சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை வைப்பதற்கு முற்றாக தடை விதிக்கப்படும்.
மேலும் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடுகளுக்கு செல்லும் போது, 10 பேருக்கும் குறைவான குழுவினரே செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

යෝෂිත – නිතීෂා යුවලට සුබ මංගලම්

Israel demolishes homes under Palestinian control