அரசியல்உள்நாடு

அனைத்து எம்.பிக்களுக்கும் பாதுகாப்பு – பொலிஸ் மா அதிபர், சபாநாயகர் இணக்கம்

பாதுகாப்பு கோரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸ் மா அதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய, உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (31) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது பாதுகாப்பு கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க பொலிஸ் மாஅதிபருடன் சபாநாயகரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தேசிய மட்ட சிறந்த பெண் தொழில் முனைவோர் விருது பெற்றார் பிஸ்ரியா

தேர்தலை கண்டு அஞ்சும் கூட்டமல்ல நாங்கள் – மஹிந்த

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு