உள்நாடு

அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட 4 சந்தேக நபர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நான்கு பேரையும் இன்று(04) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கியமை மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

மத்திய வங்கி ஆளுநரானார் கப்ரால்

உகன மற்றும் தமன பிரதேசங்களுக்கான ஊரடங்குச் சட்டம் நீக்கம்

சீனவுக்கு குரங்குகள் கொடுக்க இணக்கம்