சூடான செய்திகள் 1

அனுமதி இல்லாமல் தகவல்களை வெளியிட மருத்துவ நிர்வாகிகளுக்கு தடை

(UTV|COLOMBO)  சுகாதார அமைச்சின் செயலாளருடைய அனுமதி இல்லாமல், தொழில்நுட்பத் தரவுகள் தவிர்ந்த ஏனைய தகவல்களை வௌியிடுவதற்கு மருத்துவ நிர்வாகிகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சைப் பிரிவுகளின் நிர்வாகிகள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அறிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேற்படி இந்த பணிப்புரையை ஏற்று செயற்படாத மருத்துவ நிர்வாகிகளுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் லால் பனாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

பூஜித் ஜயசுந்தரவின் மனு ஒத்திவைப்பு (UPDATE)

குண்டானவர்களா நீங்கள்?உங்களுக்கு ஓர் நற்செய்தி…

ஸ்ரீ லங்கன் எயார், மிஹின் லங்கா முறைகேடு-ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு