அரசியல்உள்நாடு

அனர்த்தத்தை சாக்குப்போக்காக வைத்து, அரசாங்கம் அவசரகால சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

குறிப்பிட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில் அவசரகாலச் சட்டம் நீட்டிக்கப்படும் என்றும், அனர்த்த நிலைமை இன்னும் மாறவில்லை என்றும் பிரதமர் கூறுகிறார்.

2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் பிரகாரம், அவசரகால சட்ட பிரகடன நிலை அறிவிக்கப்படவில்லை. எதிர்க்கட்சி இது குறித்து எடுத்துரைத்த போதும், அரசாங்கம் அதைச் செயற்படுத்தவில்லை.

ஆகையினால், இந்த அவசரகால சூழ்நிலையை எதிர்கொண்டு மக்களுக்கு விரைந்து நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு அவசரகால சட்டத்தின் விதிமுறைகளை நிறைவேற்ற எதிர்க்கட்சியும் இணக்கம் தெரிவித்திருந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அரகல போராட்டத்தின் போது ஏற்பட்ட சூழ்நிலைமைகளின் அடிப்படையிலேயே பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அந்த நிலைமை தற்போதைய பேரிடர்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.

அச்சமோ சந்தேகமோ இல்லாமல் விரைவாக நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டாலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கோவிட் காலப்பிரிவுகளில் அமுலில் இருந்த அவசரகால சட்டத்தின் விதிமுறைகள் அவ்வாறே தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசகர கால விதிமுறைகளிலும் காணப்படுகின்றன.

இது உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) பாராளுமன்றத்தில் பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

ரூ.25000, ரூ.50000 நிவாரணங்கள், ஒரு ஹெக்டேருக்கு வழங்கப்படும் தொகை, 50 இலட்சம், 25 இலட்சம் நிவாரணங்களை சுற்றறிக்கை மூலம் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிவாரணங்கள் எவ்வாறு வழங்கப்படும் என்பது இந்த விதிமுறைகளில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இராணுவ வீரர்கள் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், பொதுமக்களின் பாதுகாப்பைப் பாதிக்கும் விளம்பரங்களை ஒட்டுதல், பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய வதந்திகளின் அடிப்படையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் சிலவும் காணப்படுகின்றன.

இவை இந்த பேரிடருக்குப் பொருந்தும் அம்சங்கள் அல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த அவசரகால கட்டளைகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை பரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் நாம் கேட்டுக்கொள்கிறோம்.

நோக்கங்களும் விதிக்கப்படும் விதிமுறைகளும் ஒருசேர அமைந்து காணப்பட வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறானதொன்றை காண முடியாதுள்ளன.

அவசரத் தேவைகள் தொடர்பான விசேட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவசரகால சூழ்நிலைகளிலேயே அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும், அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் பொது மக்களை அடக்குமுறைக்குட்படுத்த இதனை பாவிக்கக் கூடாது என்று சட்டம் கூறுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதிமுறைகளைச் சேர்க்க வேண்டும். எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அவசரகால நிலை டிசம்பர் 15 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அவசரகாலச் சட்டங்கள் அவசியமில்லை.

2005 ஆம் ஆண்டு இடர் முகாமைத்துவச் சட்டத்தில் இவை தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Related posts

சதொச விற்பனை நிலையத்தில் தீ விபத்து

editor

வெளிநாட்டுத் திரைப்படங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்!

பருப்பு, சீனி விலைகளில் மாற்றம்