அரசியல்உள்நாடு

அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்காக பாராளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக உயிர்களை இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (03) பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌனம் அனுசரிக்கப்பட்டது.

அண்மைய நாட்களில் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளம் மற்றும் பலத்த காற்று காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்கவின் வேண்டுகோளின்படி இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்படி, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நிமிட மௌன அஞ்சலியில் ஈடுபட்டனர்.

Related posts

கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த கபில நாட்டில் இல்லை

பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி நாளை

கடன் சுமை குறித்து பிரதமர் அம்பலப்படுத்தினார்