வகைப்படுத்தப்படாத

அனர்த்த நிலைமை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இடைவேளையின்றி இன்று இரவு வரை

(UDHAYAM, COLOMBO) – நாட்டை பாதித்துள்ள அனர்த்த நிலை தொடர்பில் விஷேட ஒத்திவைப்பு பிரேரணை இன்று இரவு 8.00 மணி வரை நாடாளுமன்றத்தில் இடம்பெறும் என சபாநாயக்கர் கருஜயசூரிய அறிவித்துள்ளார்.

இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய போது இது தொடர்பான சபாநாயகரின் அறிக்கை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கூடிய நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான மத்திய செயற்குழு கூட்டத்தில் இது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன் இன்றைய தினம் இடம்பெறவுள்ள விவாதம் காரணமாக வாய் வழி பதிலை எதிர்பார்த்து மற்றும் நாடாளுமன்ற கட்டளைச் சட்டம் 23/2 யின் கீழ் முன்வைக்கப்படும் கேள்விகளை முன்வைக்காமல் இருப்பதற்கும், மதிய போசன இடைவேளையின்றி விவாதத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறுமியிடம் டிரம்ப் கேட்ட கேள்வி…

Drug peddler arrested in Tangalle

කළුතර ප්‍රදේශ කිහිපයකට පැය අටක ජල කප්පාදුවක්