உள்நாடுபிராந்தியம்

அநுராதபுரம் நோக்கி பயணித்த வேன் விபத்தில் சிக்கியது – 10 பேர் காயம்

திறப்பனை பொலிஸ் பகுதியில் இன்று (19) இடம்பெற்ற விபத்தில் வேனில் பயணித்த 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெக்கிராவ பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் ஒன்று திறப்பனை பகுதியில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகிச் சென்று விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (19) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்றபோது வேனில் சாரதியுடன் 13 பேர் பயணம் செய்தாக கூறப்படுகிறது.

விபத்தில் வேனில் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

1990 ஆம்பியூலன்ஸ் சேவையின் உதவியுடன் பிரதேசவாசிகளும், பொலிஸாரும் இணைந்து காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திறப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயற்சி

அவசர சிகிச்சைக்காக 48 மணி நேரத்தில் வைத்திய முகாம்[PHOTO]

கவிஞர் தியாவின் – கவிதை நூல் வெளியீடு.