உள்நாடுபிராந்தியம்

அநுராதபுரம், தலாவ பகுதியில் பேருந்து விபத்து – ஒருவர் பலி – பாடசாலை மாணவர்கள் உட்பட 40 பேர் காயம்

அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என்று கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.

தலாவ பகுதியில் இருந்து 411 கிராமத்திற்கு பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

Related posts

இலங்கை சந்தையில் சினோபெக்கிற்கு முக்கிய பங்கு!

ஊரடங்கு எதற்காக?

சவூதி அரேபியாவின் புகழ் பெற்ற இமாம் காத்தான்குடிக்கு வருகை

editor