அரசியல்உள்நாடு

அநுர அலையிலும், வளர்ச்சியை நோக்கி நகரும் ரிஷாட்டின் மக்கள் காங்கிரஸ் கட்சி

நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அனைவரினது உழைப்பாலும், அனைவரினதும் உத்வேகத்தாலும், பலரின் தியாகத்தாலும் றிஷாட் பதியுதீனின் முயற்சியாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடளாவியரீதியில் வெற்றி தோல்விக்கு அப்பால் வீறுநடைபோட்டு மக்கள் காங்கிரஸ் கட்சி 🦚 வளர்ச்சி பாதையை எட்டியுள்ளது.

ஓர் பார்வை!!

📌 அம்பாறை மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ் 27 ஆசனங்களை கைப்பற்றி 2 சபைகளில் பெரும்பான்மையை பெற்றுள்ளதுடன். ஆண்டாண்டு காலமாக ஆட்சிசெய்த முஸ்லிம் காங்கிரஸுக்கு 33 ஆசனங்களையே பெற்றுள்ளதுடன், சம்மாந்துறை நிந்தவூர் மண் பெரும்பான்மையை பெற்றுள்ளது.

📌 திருகோணமலையில் பாரிய வளர்ச்சியை மக்கள் காங்கிரஸ் பெற்றுள்ளதுடன் 🦚 21 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது, அதுபோல் ஆண்டாண்டு காலம் ஆட்சி செய்யும் மு.காவுக்கு 22 ஆசனங்களையே பெற முடிந்தது.

📌 மட்டு. ஓட்டமாவடி சபையிலும் 🦚 பெரும்பான்மையை பெற்றுள்ளதுடன் ஏனைய சபைகளில் அதிகமான போனஸ் ஆசங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

📌 றிஷாட் பதியுதீனின் தலைமைத்துவத்தில் வன்னியில் 40ற்கும் மேற்பட்ட ஆசனங்களை டெலிபோன் பெற்றுள்ளது.

📌 முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் சில இடங்களில் வட்டாரங்களையும், போனஸ்களையும் பெற்றுள்ளது குறிப்பாக களுத்துறை, குருணாகல், அநுராதபுரம், மாத்தறை மாவட்டங்களில் மக்கள் காங்கிரஸ் வெற்றிவாகை சூடியுள்ளது.

📌 பல இடங்களில் தலைவர் றிஷாட்டிற்கு சவால்விட்ட வட்டாரங்களில் 🦚 அமோக வெற்றிபெற்று சவாலை நிறைவேற்றியதும் இத்தேர்தலில் பிரதான அம்சமாகும்.

📌 புத்தளம் கற்பிட்டியில் நல்ல பெறுபேற்றை பெற்ற மக்கள் காங்கிரஸ், நகர சபை, பிரதேச சபையிலும் சில ஆசனங்களை கைப்பற்றியுள்ளது!

📌 குருணாகல் மாநகர சபையிலும், குளியாப்பிட்டியிலும் ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், களுத்துறையிலும் 🦚 ஆசனங்களை பெற்றுள்ளதுடன் அனுராதரபுரத்திலும் ஆசனங்களை கைப்பற்றியுள்ளது!

📌 தமிழ், சிங்கள உறுப்பினர்களையும் வடக்கில் 🦚 பெற்றுக்கொண்டதும் விஷேட அம்சமாகும்!

அது போல் நாடளாவிய ரீதியில் சுமார் 6-8 வரையான சபைகளில் பெரும்பான்மையை 🦚 பெற்றுள்ளதுடன், சுமார் 100ற்கும் மேற்பட்ட ஆசனங்களை (60 மயில் சின்னம், டெலிபோன் சின்னத்தில் ஏனைய சீட்) பெற்றுக்கொண்டுள்ளது.

அல்லாஹ் நாடியது நடந்துள்ளது!
அனைத்தும் நலவுக்கே!! சபையை கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்கள் சேவைகளை தொடர்வோம்..!!! குறுகிய காலத்திற்குள் கட்சியை உருவாக்கி சாதனையாக மாறிவரும் நமது தலைவர் றிஷாட் பதியுதீனின் கைகளை பலப்படுத்தி கட்சியை இன்னும் வளர்ச்சியடையச்செய்வோம்!

சப்னி அஹமட்
(அட்டாளைச்சேனை)

Related posts

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்துவது தொடர்பான அறிவிப்பு

editor

அக்கினிச் சுவாலையில் இருந்து மீண்ட உடல்களை அடக்கம் செய்யும் முறை [VIDEO]

இறுகியது தெல்கந்த சந்தி