உள்நாடு

அத்தியாவசிய மருந்து தேவைகளுக்காக ஜப்பானிடமிருந்து $1.5 மில்லியன்

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஜப்பான் அரசு உதவ முன்வந்துள்ளது.

அதன்படி, ஜப்பான் அரசாங்கம் யுனிசெஃப் மூலம் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் அத்தியாவசிய மருந்துகளை வழங்கும்.

இந்த மருந்துகள் சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படும் என யுனிசெப் அறிவித்துள்ளது.

Related posts

ஜயலத் மனோரத்ன காலமானார் [VIDEO]

ராஜித சேனாரத்ன கைது

பத்தரமுல்ல தலைமை அலுவலகத்திற்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு