உள்நாடுவணிகம்

அத்தியவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்க திட்டம்

(UTVNEWS | COLOMBO) -தொற்று பரவுவதை தவிர்ப்பதற்கு மக்களுக்கு அத்தியவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பொறிமுறையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நடைமுறைகளும் கொரோனா ஒழிப்புக்கு சுகாதாரத் துறை முன்னெடுத்து வரும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவானதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அத்தியாவசிய சேவைகளை பேணுவது முக்கியமானதாகும்.

விவசாயிகள், தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, விவசாய மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மரக்கறி, நெல், சோளம், உழுந்து, பாசிப்பயறு, கௌபி, குரக்கன் பயிரிடுவதற்கு விவசாயிகளை வலுவூட்டுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை – மஹிந்த

editor

ஆணைவிழுந்தான் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

கொரோனா வைரஸ் – 72 பேருக்கு உறுதியானது