உள்நாடுபிராந்தியம்

அதிவேகமாக ஆபத்தான முறையில் பஸ்களை ஓட்டிச் சென்ற சாரதிகள் கைது

நேற்று (06) இரவு கண்டியிலிருந்து ஹட்டன் வரை ஒரே திசையில் 2 தனியார் பஸ்களை அதிவேகமாக ஓட்டிச் சென்ற சாரதிகள் இருவரை ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு கைது செய்துள்ளது.

2 பஸ்களும் கண்டி பஸ் நிலையத்திலிருந்து இரண்டு சந்தர்ப்பங்களில் தங்கள் பயணத்தைத் தொடங்கியிருந்தன.

கினிகத்தேனை பகுதியில் பஸ்களின் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், 2 பஸ்களின் சாரதிகள் ஆபத்தான முறையில் பஸ்களை அதிவேகமாக ஓட்டிச் செல்வதை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து, ஹட்டன் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

உடனடியாகச் செயல்பட்ட பொலிஸார், 2 பஸ்களையும் ஓட்டிச் சென்ற சாரதிகள் இருவரையும் கைது செய்யுமாறு ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.

மேலும் இரு சாரதிகளும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கும் எதிராக ஆபத்தான வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டின் பேரில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் – டில்வின் சில்வா

editor

OTTO குளியலறை சாதனங்களுக்கு தரத்துக்கான SLS சான்றிதழ்

editor

ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தளை நகராதிபதி கைது [VIDEO]