உள்நாடு

அதிருப்தி வெளியிட்ட வியாபாரிகள்!

(UTV | கொழும்பு) –

எதிர்வரும் திங்கட்கிழமை மலரவுள்ள உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் வியாபாரிகள் திருப்தியான வியாபாரம் அற்ற நிலையில் காணப்படுகின்றனர். குறிப்பாக பொங்கல் பானை உற்பத்தியாளர்கள், உள்ளூர் உற்பத்தி விற்பனையாளர்கள், வாண வேடிக்கைகள், வெடி விற்பனையாளர்கள் இவ்வாறான நிலையை எதிர்கொள்கின்றனர்.

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி, ஆகிய சந்தைக் கடைகளிலும் இவ்வாறான நிலை காணப்படுகிறது. குறிப்பாக இது தொடர்பாக விற்பனையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன் வற் வரியும் அதிகரித்துள்ளது. இதனால் நாமும் விற்பனைப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளோம்.

குறிப்பாக ஒரு கிலோ அரிசி வேகவைக்கும் மண்பானை ஒன்றின் விலை கடந்த 03 வருடத்திற்கு முன் 500 ரூபாவாக இருந்தது இப்போது 2024 ஆண்டு 800 ரூபாவாக இருக்கின்றது. அதே போன்று ஏனைய பானைகளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 800 ரூபா முதல் 2000 ரூபா வரை விற்பனையாகின்றது. பழவகைகள் ,வெடிபொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது என்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கட்சியை ஒன்றிணைக்க உதவுமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு

editor

பலத்த மழை பெய்ய வாய்ப்பு

editor

நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக ‘ரட்டா’ கைது