உள்நாடு

அதிகரித்த முட்டை விலை!

(UTV | கொழும்பு) –

பண்டிகை காலம் நெருங்கி வருவதால் முட்டை விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 42 முதல் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட வெள்ளை முட்டை ஒன்றின் விலை தற்போது 50 ரூபாவை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிவப்பு நிற முட்டை ஒன்று 53 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் முட்டை விலை அதிகரிப்பது வழமை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை விலை அதிகரிக்கப்படாது என முட்டை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க முன்னதாக தெரிவித்தார்.

 

.BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இல்லை

சதொச விற்பனை நிலையத்தில் தீ விபத்து

editor

நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டது