சூடான செய்திகள் 1

அதிக வெப்பமுடனான வானிலை…

(UTV|COLOMBO) பல மாவட்டங்களில் இன்றும்(27) வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புத்தளம், குருணாகல், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, அனுராதபுரம், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று அதிக வெப்பமான காலநிலை நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதிக வெப்பமான வானிலை காரணமாக பொதுமக்களை அதிக நீர் பருகுமாறும் நிழலான இடங்களில் தரித்து நிற்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, புத்தளத்தில் பகல் வேளையில் 4 சென்டிகிரேட் வெப்பமும் அனுராதபுரம், யாழ்ப்பாணம், கட்டுகஸ்தொட்ட மற்றும் குருணாகல் பகுதிகளில் 3 சென்டிகிரேட் வரையில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை விஜயம்

பேரூந்து விபத்தில் ஒருவர் பலி – 03வர் காயம்

8500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை