சூடான செய்திகள் 1

அதிக விலைக்கு புற்று நோய்க்காக கொள்வனவு செய்யப்படும் மருந்து ஊசிகளை தடை செய்ய உத்தரவு

(UTV|COLOMBO) பல்லின நிறுவனத்தினால் கூடுதலான விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை புற்று நோய்க்கான மருந்து ஊசிகளை சுகாதார அமைச்சர் தடை செய்துள்ளார்.

மருந்தக கூட்டுதாபனத்தின் 42 ஆவது ஓசுசல கிளையை மாத்தளையில் நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அரச மருந்தக கூட்டுதாபனத்தினால் பல்லின நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்படும் புற்று நோய் மருந்து ஊசியையும் கொள்வனவு செய்வதை தடை செய்யுமாறு தாம் ஆலோசனை வழங்கியிருப்பதாக சுகாதார போசாக்கு சுதேச மற்றும் வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

“அடித்து வளர்த்தாட்டிவிட்டேன்” சாய்ந்தமருது கொலையின் முழு விபரம்!

உடவளவை நீர்த்தேத்தின் திறக்கப்பட்ட இரண்டு வான் கதவுகள் மூடல்

“02 மாதங்களில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்படும்” இராஜாங்க அமைச்சர்