உள்நாடுபிராந்தியம்

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை – பொத்துவில் வர்த்தகருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று (21) நுகர்வோர் விவகார அதிகார சபையினால் சோதனை செய்யப்பட்டது.

நுகர்வோர்களினால் விடுக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த திடீர் சோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது.

இதே வேளை அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்கு தாக்கல் ஒன்று இன்று பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, பொத்துவில் நீதவான் நீதிமன்றம் 1,00,000/= ரூபாவை அபராதமாக விதித்துள்ளது. 

நுகர்வோர் விவகார அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் பொறுப்பதிகாரி சாலிந்த நவரத்தன அவர்களினால் இந்த வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டது. 

1500 மில்லிலீற்றர் குடிநீர் போத்தலின் கட்டுப்பாட்டு விலை 130/- ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வர்த்தக நிலையம் அதனை 150/- ரூபாவிற்கு விற்பனை செய்ததாக குற்றம்சாட்டி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட வர்த்தக நிலையம் நீதிமன்றத்தின் முன் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டது. 

தண்டனை வழங்குவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளான இஷட்.எம் ஸாஜீத் மற்றும் என்.எம் றிப்கான், இந்த குற்றத்திற்காக ஐந்து இலட்சம் முதல் ஐம்பது இலட்சம் ரூபா வரை அபராதம் விதிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினர். 

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட நீதவான், குறித்த வர்த்தக நிறுவனத்திற்கு 1,00,000/= ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Related posts

கிராண்ட்பாஸில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – இருவர் கைது

editor

இலங்கை மாணவர்களுக்கு விசேட விமான சேவை

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்த வேண்டாம்