விளையாட்டு

அதிக விக்கட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் சௌதி

(UTV | நியூசிலாந்து) – சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ரிம் சௌதி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான நேற்றைய இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் அவர் 3 விக்கட்களை வீழ்த்தியிருந்தார்.

இதற்கமைய இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் 99 விக்கட்டுக்களை பெற்று அதிக விக்கட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

எவ்வாறாயினும் இருபதுக்கு 20 போட்டிகளில் 107 விக்கட்களை வீழ்த்திய லசித் மாலிங்க முதலிடத்தில் உள்ளார்.

அத்துடன் குறுகிய போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட விக்கட்களை வீழ்த்திய வீரராகவும் லசித் மாலிங்க திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றியை ருசித்த பாகிஸ்தான்

நடுவரின் இருக்கையை சேதப்படுத்திய பிரபல டென்னிஸ் வீராங்கனை

5000 ஓட்டங்களுடன் 09 வது இடத்தைப் பிடித்த மெத்திவ்ஸ்