அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் பொதுமக்களுக்கான இலவச வைத்திய சேவையினை உடனடியாக வழங்குமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் AS உவைஸ் அட்டாளை சேனை வைத்தியசாலையில் பொறுப்பு அதிகாரியை கேட்டுக் கொண்டார்.
மழைகாலம் ஏழை மக்கள் அவதியுறும் இச்சந்தர்ப்பத்தில் அரச வைத்திய சாலையில் வெளி நோயாளர் பிரிவுகளை மூடிவிட்டு
தமது தனியார் வைத்தியசாலையினை நடாத்தும் வைத்தியர்களால் வைத்திய சேவைக்குரிய மரியாதை இழந்துள்ளது.
வைத்தியர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பில் சரியான முடிவினை எடுக்காவிட்டால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16.01.2026) அட்டாளைச்சேனை பொதுமக்கள் அனைவரும் ஒன்றினைந்து இந்த மனிதாவிமானற்ற செயலைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
-கே எ ஹமீட்
