உள்நாடு

அடுத்து ஆட்சி அமைக்கும் எந்தவொரு அரசாங்கத்திலும், அமைச்சராக இருப்போம்: மனோ

அடுத்து ஆட்சி அமைக்கும் எந்தவொரு அரசாங்கத்திலும் தாம் அமைச்சராக பதவி வகிக்க உள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் நேற்று(23.04.2024) கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது அணியான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் முன்னணி வகிப்பார்.

மேலும், எதிர்வரும் தேர்தலில் எந்த வேட்பாளர் ஜனாதிபதியாக வேண்டும் என்பதனை மக்கள் தீர்மானிப்பார்கள்.

நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமாரவும் தம்மீது நம்பிக்கைக் கொண்டு தமது அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

Related posts

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

editor

ஒரே பாலின திருமணத்திற்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடும் எதிர்ப்பு

editor

MV-Xpress pearl கப்பலை அகற்றும் பணிகள் நவம்பரில்