உலகம்

அடுக்குமாடி இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி

(UTV |  மும்பை, இந்தியா) – மும்பையில் பெய்த கனமழையால் மூன்று மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கட்டிடத்தில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையும் துரிதமாக இடம்பெற்று வருவதாக மும்பை பொலிஸ் அதிகாரி ரவீந்திர கதம் கூறியுள்ளார்.

மும்பையின் மலாட் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றே புதன்கிழமை தாமதமாக இடிந்த வீழ்ந்தாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

மீட்பு பணிகளை குடியிருப்பாளர்களும், தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாளும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதுவரை காயமடைந்த ஏழு பேர் மீட்கப்பட்டு, அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கொரோனா தொற்றினால் 84 இலட்சம் பேர் பாதிப்பு

ஈரானிலுள்ள இலங்கையர்களை வெளியேற்ற உதவும் இந்தியா!

Shafnee Ahamed

பாரியளவில் உயர்ந்த தங்கத்தின் விலை

editor