கேளிக்கை

அஜித் படத்தில் இணைந்த முன்னணி நகைச்சுவை நடிகர்

(UTV|இந்தியா) – ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு வலிமை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் அஜித்துடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். ஏற்கனவே விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் யோகிபாபு இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

அபூர்வமான வெள்ளை நிற டொல்பினை பார்த்துள்ளீர்களா?..படுவைரலாகி வரும் வீடியோ

ரஜினிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

நடிகையை திருமணம் செய்த இயக்குனர் வேலு பிரபாகரன்