வகைப்படுத்தப்படாத

அசாம் மழை வெள்ளத்திற்கு மேலும் 6 பேர் பலி

(UTV|INDIA)-அசாம், மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அசாமின் முக்கிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் நதிகளின் கரைகள் உடைப்பெடுத்து  வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரெயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஐந்தரை லட்சம் பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட  மக்களுக்காக 457 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மழை, வெள்ளம் தொடர்பான விபத்துகளில் நேற்று மட்டும் 6 பேர் பலியாயினர். கரீம்கஞ்ச் மாவட்டத்தில் 4 பேரும் சச்சார் மாவட்டத்தில் 2 பேரும் இறந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அசாமில் மழை வெள்ள பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல், மணிப்பூர் மற்றும் திரிபுராவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் இறந்துள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்கல் தம்பதியருக்கு ஆண் குழந்தை-(PHOTOS)

10-Hour water cut shortly

Light showers expected in several areas today