வகைப்படுத்தப்படாத

‘அங்கொட லொக்கா’ உள்ளிட்ட இருவரை இலங்கைக்கு கொண்டுவர முயற்சி

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் சென்னையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் என அறியப்படும் அங்கொட லொக்கா மற்றும் லடியா ஆகிய இருவரையும், இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு கொண்டுவர காவற்றுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இந்தியாவுக்குச் சென்ற நிலையில், சென்னை காவற்றுறை அதிகாரிகளால் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

களுத்துறையில் சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேக நபர்களாக, அங்கொட லொக்கா மற்றும் லடியா ஆகிய இருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காவற்றுறை அதிகாரிகள் இருவர், பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் சமயங் உள்ளிட்ட ஐவர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த சந்கே நபர்கள் இருவரையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு, அவர்களின் குற்றங்கள் அடங்கிய முழுமையான அறிக்கையொன்றை இலங்கை காவற்றுறை அதிகாரிகள், சென்னை காவற்றுறையினருக்கு அனுப்ப தயார் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கையை விரைவில் சென்னை காவற்றுறையினருக்கு அனுப்பிய பின்னர், சந்தேக நபர்கள் இருவரையும் சென்னை காவற்றுறை அதிகாரிகள், இலங்கை காவற்றுறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள் என, தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Related posts

US approves Taiwan arms sale despite Chinese ire

இத்தாலியில் அவசரநிலை பிரகடனம்…

Coach disappointed with World Cup performance