உள்நாடு

அங்குலான பதற்ற நிலை சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது

(UTV | கொழும்பு) – அங்குலானை காவல் நிலையத்திற்கு முன்பாக ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 10ம் திகதி மொரட்டுவை – லுனாவ பாலத்திற்கு அருகில் காவல்துறையினரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதன் காரணமாக காவல்துறை உத்தியோகத்தர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்று(16) அங்குலானை காவல்நிலையத்திற்கு முன்பாக குழு ஒன்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து செயற்பட்டபோது பதற்ற நிலை ஏற்பட்டதுடன், காவல்துறையினர் மீது கல்வீச்சு தாக்குதலும் நடத்தப்பட்டது.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு காவல்துறையினரால் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அதி சொகுசு பேருந்துகள் மீது வழக்குத் தாக்கல்

இரண்டு மாதங்களில் IMF திட்டத்தின் ஆரம்ப ஒப்பந்தம்

சீரற்ற வானிலை காரணமாக பல ரயில் சேவைகள் இரத்து

editor