இஸ்லாமிய உலகத்தின் தொன்மையான மரபுகளைச் சுமக்கும் மீலாதுன் நபி விழா, இம்முறை மிகுந்த புனிதத்தையும் பெருமையையும் சுமந்து, அக்கரைப்பற்றில் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
இந்த நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடுகள் முழுமுறையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக இன்று, அக்கரைப்பற்று மாநகர ஹல்லாஜ் தகவல் வள நிலையத்தில், விழாவுக்கான குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மாநகர கல்வி கலாசாரத் துறைத் தலைவர் மற்றும் கௌரவ உறுப்பினர் ஏ.எல். தவம் அவர்கள் தலைமையிலான மீலாதுன் நபி தின நிர்வாகக் குழு பங்கேற்றது.
மேலும், தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், மாண்புமிகு மாநகர முதல்வருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் கலந்து கொண்டு,
நிகழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மீலாத் விழாவின் சமூக, ஆன்மீக பங்கு குறித்து ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து அனைவரையும் உணர்வுப்பூர்வமாக ஈடுபடுத்தினார்.
1500வது மீலாத் விழா — நபி(ஸல்) வாழ்வியலை நம்முள் புதுப்பித்து,அல்-குரான், அல்-ஹதீஸ் கற்றுத்தந்த வழிமுறையில் நமது வரைமுறைகளுக்குற்பட்டு ஒற்றுமையும், அமைதியும் நிரம்பிய சமூகத்துக்கான அழைப்பாக அமைக்கப்படும்.
இன்னும் சிறப்பு நிகழ்வுகள், அழைப்பிதழ்கள், நிகழ்ச்சி நிரல் போன்றவை விரைவில் பகிரப்படும். அனைவரும் இந்த மகத்தான நிகழ்வில் பங்கேற்று பாக்கியம் பெற அழைக்கப்படுகிறீர்கள்.