அரசியல்உள்நாடு

அக்கரைப்பற்றில் ACMC யின் தேர்தல் பிரச்சார காரியாலயங்களை திறந்து வைத்தார் ரிஷாட் எம்.பி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான காரியாலயங்கள் திறப்பு விழாவும், முதலாவது மக்கள் சந்திப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த காரியாலயங்களை திறந்து வைத்தார்.

இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் உட்பட முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள், உலமாக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

Related posts

மாரடைப்பால் இளம் வயதினர் உயிரிழப்பது அதிகரிப்பு – கொழும்பு மரண விசாரணை அதிகாரி.

ஈரான் செல்லும் அலி சப்ரி!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு