அரசியல்உள்நாடு

வீடியோ | அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, நாடளாவிய ரீதியில் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு, கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில், இன்று (11) திருகோணமலை, ஜேகப் பார்க் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாகவும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தும் போட்டியிட்டு, நாடளாவிய ரீதியில் தெரிவான 140 உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. அஷ்ரப் தாஹிர், முத்து முஹம்மது மற்றும் அரசியல் அதிகாரபீட உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

-நூருல் ஹுதா உமர்

வீடியோ

Related posts

இங்கிலாந்து ராணி உலகை விட்டும் பிரிந்தார்

ஊழல்வாதிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் அரசாங்கம் வழங்காது – கொழும்பு மாநகர சபையின் மேயர் நாளை பதவியேற்பார் – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor

உடலில் உள்ள கிருமிகளை நீக்கும் கருவி கண்டுபிடிப்பு