வகைப்படுத்தப்படாத

ஃப்ரான்ஸில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

(UTV|FRANCE)-கிழக்கு ஃப்ரான்ஸின் ஸ்ட்ராபோர்க் நகரில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் வரையில் காயமடைந்தனர்.

தாக்குதலை நடத்தியவர் பாதுகாப்பு தரப்பினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும் அவர் தலைமறைவாகி இருப்பதாகவும், அவரை தேடும் பணிகளை காவற்துறையினர் மேற்கொள்வதாகவும் ஃப்ரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நகரில் அமைந்துள்ள க்றிஸ்ட்மஸ் சந்தை ஒன்றில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பில் ஃப்ரான்ஸ் தீவிரவாத முறியடிப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை காயமடைந்தவர்களில் 7 பேரின் உடல்நிலை பாரதூரமாக இருப்பதாக மருத்துவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர் ஏற்கனவே தீவிரவாத அச்சுறுத்தல் சந்தேகத்தின் பேரில் அவதானத்துக்கு உட்படுத்தப்பட்டவர் என்றும் கூறப்புடுகிறது.

 

 

 

 

 

Related posts

Cabinet papers to review Madrasas & MMDA

කිලිනොච්චි ප්‍රදේශයේ මවක් සහ පුතෙක් ඝාතනයක්

400 ஆண்டுகள் பழமையான போன்சாய் மரம் திருட்டு