உள்நாடு

YouTuber கிருஷ்ணாவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு

YouTuber கிருஷ்ணாவை அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த YouTuber தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவர் கடந்த 9ஆம் திகதி பண்டத்தரிப்பு பகுதிக்கு சென்றவேளை சில்லையூர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டார்.

விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை பொலிஸார் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

இந்நிலையில் அவரை இன்றுவரை (19) விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பின்னர் அவர் தொடர்பான வழக்கு இன்று (19) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் 2 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Related posts

ரஞ்சன் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

ஜனாதிபதி அநுர முன்னர் பேசிய விடயங்களை இப்போது நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் – பழனி திகாம்பரம்

editor

மீட்டர் சவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம்