உலகம்விசேட செய்திகள்விளையாட்டு

WWE மல்யுத்த வீரர் ஜோன் சீனா கடைசி போட்டியில் தோல்வியுடன் விடைபெற்றார்

WWE மல்யுத்த வீரர் ஜோன் சீனா கடைசி போட்டியில் தோல்வியுடன் விடைபெற்றார்.

ஜோன் சீனா, WWE மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி அவரது கடைசிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் மல்யுத்த வீரர் கன்தர் உடன் ஜோன் சீனா மோதினார்.

ஆனால், டேப் அவுட் முறையில் இந்தப் போட்டியில் ஜான் சீனா தோல்வியுற்றார்.

இத்துடன் அவரது 23 ஆண்டுகால WWE சகாப்தம் முடிவுக்கு வந்தது.

எல்லா காலத்திலும் அதிகமுறை சம்பியன் பட்டம் வென்றவர் ஜோன் சீனா. 2005இல் முதல் வெற்றியை (WrestleMania 21) சம்பியன் பட்டத்தை வென்ற இவர், மொத்தமாக 17 சம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.

மேலும் 2009, 2010 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் சிறந்த சூப்பர் ஸ்டார் உட்பட 10 முறை Slammy விருது வென்றிருக்கிறார்.

Related posts

பாகிஸ்தானில் அடை மழை – வெள்ளம் ஏற்படும் அபாயம் – முன்னெச்சரிக்கை வழங்கிய இந்தியா

editor

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

editor

BREAKING NEWS – அமைச்சரவையில் மாற்றம் – முனீர் முழப்பர் | சமய விவகார பிரதி அமைச்சர் – அர்கம் இல்யாஸ் | மின் சக்தி பிரதி அமைச்சர்

editor