உள்நாடு

UPDATE : கருணா இதுவரையில் CID இல் முன்னிலையாகவில்லை

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் வாக்குமூலம் ஒன்றினை வழங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுவரையில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருந்த காலகட்டத்தில் ஆனையிறவு பகுதியில் ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக கருணா அம்மான் சமீபத்தில் அம்பாறையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் சர்ச்சைமிக்க கருத்தினை வெளியிட்டிருந்தமை தொடர்பில் இவருக்கு நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அழைப்புக்கு ஏற்ப முன்னாள் பிரதி அமைச்சர் இன்றைய தினம் காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்னிலையாவதாக அறிவித்திருந்த போதிலும் இதுவரையில் அவர் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தேர்தல் பிரசாரத்தில் தனது புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாமென உத்தரவு

அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீளவும் இன்று முதல் அமுலுக்கு