உள்நாடு

UPDATE – லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலைகளை நேற்று(21) நள்ளிரவு முதல் லங்கா ஐஓசி நிறுவனம் அதிகரித்துள்ளது.

அதற்கமைய, ஒக்டென் 92 வகை பெற்றோல் லீற்றரொன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலையையும் 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒக்டென் 95 பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விலை அதிகரிப்பு தொடர்பில் சிபெட்கோ எவ்வித அறிவிப்பினையும் முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

2024 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெறும் பிரபல கிரிக்கெட் தொடர்!

பஸ் கட்டணக் குறைப்பு இடைநிறுத்தம்

editor

“ முஸ்லிம்களுக்கு எதிரான ஏகாதிபத்திய போக்குகள் தோல்வியுற பிரார்த்திப்போம்” றிஷாட் பதியுதீனின் பெருநாள் வாழ்த்து