உள்நாடுபிராந்தியம்

Update – ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் பலி

ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயமடைந்த கணவன், மனைவி இருவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கணவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (3) இரவு 7 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதிக்கு அருகில் உள்ள ஒரு கடையில் காத்திருந்த தம்பதியை இலக்கு வைத்து மேற்படி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

இனப்படுகொலை, போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை – சிறிதரன் எம்.பி

editor

சகல அரச ஊழியர்களுக்கும் இன்று கடமைக்கு