வகைப்படுத்தப்படாத

UPDATE-பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சற்று முன்னர் பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவிர ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நான்கு உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் டி.பி. ஏக்கநாயக்க, நிஷாந்த முத்துஹெட்டிகம, காதர் மஸ்தான், சுசந்த புஞ்சிநிலமே ஆகிய நான்கு உறுப்பினர்களும் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.


பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இன்றைய தினம் சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரக் கட்சி தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களையும் பெறும் செயற்பாடுகள் தற்சமயம் இறுதி நிலையை எட்டியுள்ளதாக ஒன்றிணைந்த எதிரக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இங்கிலாந்து இளவரசர் பிலிப் நலமுடன் உள்ளார் – எட்வர்டு மருத்துவமனை

இன்றுடன் ஓய்வு பெறும் ஜப்பானிய பேரரசர்

Tamil MPs to meet the president today