உள்நாடு

UNP கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கைது

(UTV | கொழும்பு) –  சுங்க சட்டத்தை மீறி, வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உதிரிப்பாகங்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட வாகனத்தை வைத்திருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் விசேட அதிரடிப் படையால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மார்க்ரட் சில்வாவே இந்தக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related posts

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் 10ஆம் திகதி மூடப்படும்

மே 9ஆம் திகதி உயிரிழந்த எம்.பி.க்கு இழப்பீடு

பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க சட்டமா அதிபர் அனுமதி