உள்நாடு

STF சிரேஷ்ட பெண் அதிகாரி ஒருவர் ஆண் மாறுவேடத்தில்

(UTV | கொழும்பு) –    பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பெண் அதிகாரி ஒருவரால் பல புதிய உத்தியோகத்தர்கள் சிக்கலில் சிக்கியுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மூத்த அதிகாரியின் நடத்தை ஒரு ஆணுக்கு நிகராக இருப்பதாகவும், அவர் ஆண் ஒருவரது அடையாள அட்டையை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இரவில் பெண்கள் தங்கும் விடுதிகளுக்குள்ச சென்று புதிய அதிகாரிகளுக்கு பல்வேறு வகுப்புகளை நடத்துவதும் அடிக்கடி தகாத வார்த்தைகளை பேசுபவர் என்றும் அவர் அறியப்படுகிறார்.

இந்த உயர் அதிகாரி குறித்து கேட்டபோது, ​​இதுவரை வெளியாகியுள்ள உண்மைகளின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

Related posts

கொழும்பில், பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வு!

உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

editor

விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்கு செல்ல பணிப்பு