வகைப்படுத்தப்படாத

SP க்கு கொரோனா பரவ நான் காரணமல்ல

(UTV | இந்தியா) – பிரபல பாடகர் எஸ் பி பிக்கு தெலுங்கு பாடகி மாளவிகா மூலமாக கொரோனா பரவியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறிய நிலையில் சற்று முன் வெளியான மருத்துவமனை அறிக்கையில் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னமும் ஆபத்தான கட்டத்தை அவர் தாண்டவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் எஸ்பி பிக்கு தெலுங்கு பாடகியான மாளவிகா என்பவர் மூலமாகதான் கொரோனா பரவியது என்று சமூகவலைதளங்களில் செய்தி பரவ ஆரம்பித்தது. ஏனென்றால் இருவரும் சில நாட்களுக்கு முன்னர் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டனர். அதே போல மாளவிகாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ள மாளவிகா, எஸ் பி பிக்கு கொரோனா என்று செய்தி வந்த பின்னர்தான் தானும் சோதனை செய்து கொண்டதாக சொல்லியுள்ளார்.

Related posts

டிரம்ப் ஜூனியரை விவாகரத்து செய்தார் மனைவி

Showers, winds to enhance over South-Western areas

காலநிலை