உள்நாடு

SLFPயிலிருந்து 3 MPக்கள் நீக்கம்!

பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க,  லசந்த அலகியவண்ண மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) கட்சித் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு மகியங்கனை தொகுதி அமைப்பாளர் கே.பி. குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவண்ண பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு ஹெக்டர் பெத்மகே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் திருத்தம் : அமைச்சரவை அங்கீகாரம்

ஜனாதிபதி அநுர ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்

editor

தேசபந்துவை காப்பாற்றும் பிரபலம்! சிக்கிய கார்!

Shafnee Ahamed