உள்நாடு

SLBC யில் 1000 குத்பா பயான் கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் நிறைவு நிகழ்ச்சி

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் வார வாரம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் குத்பா பிரசங்கத்தின் கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் இருந்து நேரடி ஒளிபரப்பி வந்தது அதில் 1000 மாவது வார கடந்த 24.01.2025 வெள்ளிக்கிழமை குத்பா நடைபெற்றது.

இந்த நேரடி ஒலிபரப்பு முன்னிட்டு கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முஸ்லிம் சேவையூம் இணைந்து நிகழ்வொன்றின் நடாத்தியது

இந்த நிகழ்வுக்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேராசிரியர் உதித்த ஹயாசான்இ அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷேக் எம்.எல்.எம் றிஸ்வி முப்தி ஆகியோர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்நிகழ்வினை 20 வருடங்களுக்கு மேலாக நேரடி ஒலிபரப்புச் செய்துவரும் சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.ரிசாஇ மற்றும் முஸ்லிம் சேவை பிரதிப் பணிப்பாளர் எம்.ரின்சியா முன்னாள் பணிப்பாளர் அகமத் முனவர்இ முன்னாள் இ.ஒ.கூ.தலைவர் ஹட்சன் சமரசிங்க ஆகியோர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

அத்துடன் பாடசாலை முவ் இனங்களையும் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பாடசாலை புத்தகப் பை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ் நிகழ்வில் பள்ளி பரிபாலன சபையின் தலைவர் செயலாளர் உட்பட பள்ளிவாசல் இமாம்கள் கலந்து கொண்டனர்.

-அஷ்ரப் ஏ சமத்

Related posts

சட்டவிரோத சுவரொட்டி, பதாகைகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்

தியாகி அறக்கொடை நிதியத்தினால் நிதியுதவிகள் வழங்கிவைப்பு!

“திட்டமிட்ட படி தேர்தல் நடக்கும்” சஜித்திடம் உறுதி