உள்நாடுசூடான செய்திகள் 1

SJB மீண்டும் UNPயுடன் ? ஹரீனின் அழைப்பு

(UTV | கொழும்பு) –

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உறுப்பினர்கள் என்பதால், அவர்கள் மீண்டும் கட்சியில் இணைவதற்கு எந்தத் தடையும் இல்லை என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ”ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கலாநிதி ஹர்ஷ டி. சில்வா எம்.பியைத் தவிர வேற எந்த பாராளுமன்ற உறுப்பினரும் இராஜினாமா செய்யவில்லை” என தெரிவித்தார்.

“ஐக்கிய மக்கள் சக்தியானது  ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு அங்கமாகும். எனவே இவர்கள் அனைவரும் மீண்டும் ஐ.தே.க.வில் இணையலாம். இது வரும் காலங்களில் நடக்கும்.

ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள சிலர் தமது பழைய வீட்டுக்கு (ஐ.தே.க) திரும்புவதை ஒர சிலர் தடுக்கக் காத்திருந்தாலும், அது சாத்தியமில்லை.

மேலும் வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை காப்பாற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே முன்வந்தார் எனவும் அவருக்கு ஆதரவளிப்பது அனைவரினதும் கடமை எனவும் அமைச்சர் பெர்னாண்டோ வலியுறுத்தினார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியை மீண்டும் நாட்டின் தலைவராக நியமிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென கேட்டுக் கொள்வதாகவும் அமைச்சர் கூறினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை – அரசாங்கம், எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்து சிறந்த தீர்வொன்றை எடுப்பார்கள் – ஜீவன் தொண்டமான் எம்.பி

editor

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு : அமைச்சரவைப் பத்திரம் இன்று

கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சற்று முன்னர் ஆரம்பம்