டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தொடங்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள், வர்த்தகர்கள் மற்றும் பரோபகாரிகளிடமிருந்து நாடாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகிறது.
அதன்படி, Union Chemicals Lanka PLC நிறுவனம் ஒரு மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியது.
அதற்கான காசோலையை இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் Union Chemicals Lanka PLC நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கோசல திசாநாயக்க(தலைவர்), காமினி குணசேகர(முகாமைத்துவப் பணிப்பாளர்) மற்றும் யூ. எல். புஷ்பகுமார(பணிப்பாளர்) ஆகியோர் வழங்கினர்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு
