உள்நாடு

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Colombo West International Terminal (Private) Limited 100 மில்லியன் ரூபா நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Colombo West International Terminal (Private) Limited (CWIT) இனால் 100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.

குறித்த காசோலையை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் Satyanjal Pandey மற்றும் Colombo West International Terminal (Private) Limited இன் பிரதான நிறைவேற்று அதிகாரி Munish Kanwar ஆகியோரினால் இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

அனர்த்தத்திற்குப் பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் ஆதரவைப் பாராட்டுவதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இதன்போது தெரிவித்தார்.

எதிர்காலத்திலும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க இந்திய அரசாங்கம் தயாராக உள்ளதாக இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் இங்கு தெரிவித்தார்.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக, இந்திய தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரிவின் பிரதானி Devika Lal, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி கிருஷான் பாலேந்திர,Colombo West International Terminal இன் Zafir Hashim மற்றும் Anandhan Nagaysayanu Raj ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

ஷாருக்கானுக்கு பதிலாக இலங்கை வரும் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன்

editor

வழக்கறிஞர் அங்கியை அணிந்து கொண்டு வழக்குகளை பிரதமர் விசாரிக்க வேண்டும் – தர்மரத்ன தேரர்.

நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் 61 கைப்பேசிகள் கண்டுபிடிப்பு