உள்நாடுவிசேட செய்திகள்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை வங்கி 500 மில்லியன் ரூபா நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், பேரழிவால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை வங்கி 500 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதற்கான காசோலையை இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொய்சா ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.

இலங்கை வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பதில் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி வை.ஏ. ஜயதிலக, பிரதான நிதி அதிகாரி எம்.பி. ருவன் குமார மற்றும் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி சமீர தில்ஷான் லியனகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

திருக்கோயில் பகுதியில் 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதப் பாகங்கள் மீட்பு – பொலிசார் தீவிர விசாரணை!

editor

நாட்டை சிக்கலுக்குள் ஆழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கில்லை – சஜித் பிரேமதாச

editor

26ஆம் திகதி சுகயீன விடுமுறை: இலங்கை ஆசிரியர் சங்கம்