உள்நாடு

PHI அதிகாரிகள் – பிரதமர் இடையே இன்று பேச்சுவார்த்தை

(UTV|கொழும்பு) – பொது சுகாதார பரிசோதர் சங்கத்திற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் இன்று(28) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தொற்று நோய் தடுப்பு பணிகளின் போது வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்தையின் ஊடாக தமக்கான தீர்வு கிடைக்கும் எதிர்பார்ப்பதாகவும் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று 11 ஆவது நாளாகவும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா ஒழிப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் அவர்கள் விலகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எரிபொருள் விநியோகத்திற்கு வரப்போகும் ஆபத்து!

பாடசாலைகளை நடத்துவது குறித்து விசேட கலந்துரையாடல்

PHI பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்